எழுதியவர் – கவிஞர் சைக்கோ

ஒரு கவிதை கூட எழுதவில்லை
கடந்த சில நாட்களாக
எழுதிவிட வேண்டும் இன்று
எப்படியாவது ஒரு கவிதை
தனிமையில் தவம் கொண்டேன்
கவிதை வரம் வேண்டி
கண்களை மூடி
எத்தனை இரக்கம் என்மேல்
அவளின் நினைவுகளுக்கு
கேட்டதும் வரம் தந்து செல்கிறது
யோசித்துக் கொண்டிருக்கிறேன் இப்போது
விழியில் வழிந்தோடிய கவிதைகளை
எப்படி எழுதுவதென்று…
கவிஞர் சைக்கோ