எழுதியவர் – Fatima

உன்னால் நான் ஆழங்கள் தாண்டி
வேர் பாய்கிறேன்.
உன்னை பார்த்துதான்
கைகள் அகல விரித்து ஆகாய அளவு அகலமாகிறேன்.
உன் போல புன்னகையால் நானும் மலர்கிறேன்.
சில நேரம் முகம் மோதும் காற்றுக்கு
உன் போல் தலை அசைக்கிறேன்.
புயல் வந்தாலும் துணிவும் நீ சொன்ன வேதங்கள் தான்.
அன்பு நிழல் சொன்னாய்.
நட்புக்கு வீடு தந்து குயில் ஒலி கேட்டு
மயங்குவது போலவே நானும்
உன் போன்று காதல் செய்கிறேன்.
நீ வரலாறு பேசுகிறாய்,
உன் போல் சாதனை பேசவே இப்போது
வாழ்ந்து பழகுகிறேன்.
இப்போது மட்டுமே நிஜம் என் ரகசியம்.
உன்னால்தான் பெற்றேன்
என் ஆன்மாவின் தேவதை மரம்…!
ஜென்மங்கள் கடந்து உன் பச்சையத்தில்
பரவசமாகிறேன்…
.எப்போதும் என் உயிர் வலி மீட்சி நீயே….!