எழுதியவர் – பாரதி

ஒரு போதும் எங்கள் அன்பை
அன்பாய் பரிமாறி கொண்டதில்லை
இதுவரை,
என் நாளும் எங்கள் பாசம்
ஒருவித பகை தான்!
எங்கள் பாசம்
இரத்தத்தில் ஊறி போனது!
எங்கள் அன்பு
சண்டையில் வளர்ந்து போனது!
எதுவும் உனக்காக நான்
விட்டு கொடுத்து இல்லை
இதுவரை,
உன்னை எதற்காகவும் யாருக்கும் விட்டு கொடுத்து இல்லை!
சண்டை போட்ட கணமே
பேசி விடும்!
யாரு வந்து சம்மதம்
செய்தது!
நொடிக்கு நொடி
உன் நினைப்பு!
நாடிக்கு நாடி
ஒரே துடிப்பு!
வரம் தான் நீ எனக்கு!