எழுதியவர் – Krishna Swamy

எனக்கு இதுவெல்லாம் தெரியும் என்கிற எண்ணம் சரிதான் ஆனால், அதோடு இது கூட பிறருக்குத் தெரியவில்லையே எனும் எண்ணம் இணையும் பொழுது அறியாமையும், தலைக்கனமும் ஒருசேர நம்மை ஆட்கொண்டு விடுகிறது.
எனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணமும் அதுபோல தான். அந்த எண்ணம் வந்த பிறகு நம்மால் எதையும் கற்றுக்கொள்ள முடியாத மனநிலை உருவாகி விடுகிறது. யார் பேசினாலும் அவர்களை நான் மடக்கி விடுவேன் என்கிற எண்ணமும் அதுபோல தான்.
இதுபோன்ற எண்ணங்கள் அனைத்தும் நம்முன் இருக்கும் ஒரு மாயத் திரை போலதான். உண்மையை பார்க்கவோ? உணரவோ? தடையாகவோ மட்டுமே இருக்கும்.
இதுபோன்ற எண்ணங்கள் அனைத்தும் நாம் சரியான அனுபவங்களை கற்றுக்கொள்ள விடாமல் தடுக்கும் தடையாக மட்டுமே இருக்கும்.
“நல்ல எண்ணங்கள் மட்டுமே
நல்லதோர் வாழ்க்கையை
நமக்கு பரிசளிக்கிறது.”
யாரையும் விட நாம் உயர்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை.
யாரையும் நாம் மடக்கவும் அவசியமில்லை. யாரையும் நாம் தோற்கடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
நமது எண்ணங்கள் எப்படி உள்ளதோ? அதற்கு ஏற்றபடியே நமது உணர்வுகளும், மனநிலையும், வாழ்க்கை முறையும், நிம்மதியும் நம் வாழ்க்கையில் ஏற்படுகிறது.
“நல்லதை எண்ணுவோம்…!
சரியானதை எண்ணுவோம்…!
நம் வாழ்க்கையும் நல்லதாக, சரியானதாக அமையும்…”