கனடாவிலிருந்து மெக்சிகோ புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணித்த சமூக ஊடக குழு ஒன்றின் உறுப்பினர்கள் கொரோனா விதிகளை மதிக்காமல் செய்த மோசமான விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

நடந்தது என்னவென்றால், 111 Private Club என்ற குழுவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலங்கள், டிசம்பர் 30ஆம் திகதி, கனடாவின் மொன்றியலிலிருந்து மெக்சிகோவிலுள்ள Cancun என்ற இடத்துக்கு விமானம் ஒன்றில் பயணித்துள்ளார்கள்.

விமானத்தில், அவர்கள் மாஸ்க் அணிவது முதலான எவ்வித விமான கட்டுப்பாடுகளையோ, கொரோனா கட்டுப்பாடுகளையோ பின்பற்றவில்லை. அத்துடன், மது அருந்திக்கொண்டும், கஞ்சா புகைத்துக்கொண்டும் நடுவானில் ஆட்டம் போட்டுள்ளார்கள் அவர்கள்.

அது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கடும் கோபம் அடைந்தார்கள்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கொரோனா விதிகளுக்கு கீழ்ப்படிந்து கனேடியர்கள் பயணத்தையே தவிர்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த பார்ட்டியில் ஈடுபட்டவர்களின் செயல் முகத்தில் அறைவது போல் உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், 111 Private Club குழுவின் நிறுவனரும், விமானப் பயணத்தை ஒழுங்கு செய்தவருமான James Awad என்பவர், தங்களை எப்படியாவது திரும்ப கனடாவுக்கு கொண்டு சேர்த்து விடுமாறு விமான நிறுவனங்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.

ஆனாலும், தாங்கள் விமானத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தங்கள் குழு மட்டுமே விமானத்தில் இருந்ததாகவும், தாங்கள் அனைவருமே விமானத்தில் ஏறும் முன் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனாலும், கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அந்த வீடியோவைப் பார்த்து மக்கள் கோபமடைந்ததை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர்கள் மெக்சிகோவிலிஉர்ந்து கனடா திரும்புவதற்காக முன்பதிவு செய்திருந்த விமான நிறுவனம், அவர்களது முன்பதிவை ரத்து செய்துவிட்டதால், எப்படி கனடா திரும்புவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது அந்தக் குழு.

ஒவ்வொரு விமான நிறுவனமாக சென்று, இம்முறை தாங்கள் மாஸ்க் அணிவதுடன், ஒழுங்காக நடந்துகொள்வோம் என்று கூறி எப்படியாவது தங்களை கனடா கொண்டு சேர்த்துவிடுமாறு கெஞ்சிக்கொண்டிருக்கிறார் James.

அப்படியே அவர்கள் எப்படியாவது கனடா திரும்பினாலும், அதிகாரிகள் அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க காத்திருப்பதுடன், அவர்கள் பெடரல் விசாரணைக்கும் உட்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal