
நித்தமும்
உழவே அவன் நினைப்பு…
நீர் சூழ் உலகினில்
அதுவே அவன் பிழைப்பு…
நெற்றி வியர்வை
சிந்திட அவன் உழைப்பு…
சுற்றும் உலகை
காப்பதே அவனின் முனைப்பு…
காளைகளை
அன்போடு விரைந்து ஓட்டி
கருக்கல் பொழுதையும் அவன் முந்தி…
காடு கழணியை கணப்பொழுதில் திருத்தி…
கடின உழைப்பால் தான் கஞ்சியும் கூழும் குடிப்பான் உழவன்…
சோவென கடும் மழை பொழிந்தாலும்…
தீயென வெப்பம் அவனைச் சபித்தாலும்…
ஓவென அழாதும்
ஓடியும் ஒழியாதும்…
சாவென சாகாது பிறவுயிர்களுக்காய் உழைப்பான்…
தல மழை தரை தொடவே ஏரைப் பூட்டி
நில மகளை தொழுதே
உரம் ஊட்டி
குல தெய்வத்துக்கோர் படையல் காட்டி
பல கனவோடு வலம் வருவான் உழவன்……,
அவனே நாங்கள் வணங்கும் தெய்வம்….!!!
ஆம்,
அவர்கள் தான் என் பாட்டனும்,
அப்பனும்…..!!!
அவர்களின்
வரிசையில் தான்,
சக்திவேல் தேசியவாதி