எழுதியவர் – பொள்ளாச்சிமுருகானந்தம்.

இரவின் நீளத்திற்கு
ஒரு புத்தகம் கொடுத்தாய்…….
ஆனால்
உன் உத்தரவில்
வாசித்தலை விட….
பார்க்கச் சொல்லி கட்டளையிட்டிருக்கிறாய்……
பகல்முழுக்க
நீயோ நானோ
கொடுத்தோ வாங்கியோ கொள்கிற
ஏராளமான
என்னவோக்கள்
அந்த புத்தகத்தில்
அழகாய் பூத்துக் கிடக்கிறது…….
அந்த நீளத்திற்கு-
நள்ளிரவோ
முன்னிரவோ பின்னிரவோ……
எதும் தெரியாது…….
எல்லா இரவிலும்
புத்தகம் வெகு இயல்பாய்
புரளும்……..
இரவையும்
புத்தகத்தையும்
உயிர்த்தலோடு-
நகர்த்த ………
உன் தேவதைத்தனம் தருகிற
குட்டியூன்டு தேநீர்
அந்த இரவின் நீளத்தை
கடந்து சென்று விடுகிறது…