பிரதான உணவு வகைகளின் சடுதியான விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையர்களின் உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் குறித்த அமைப்பின் உலகளாவிய தகவல் மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியங்கள் மற்றும் ஏனைய பிரதான இறக்குமதி உணவுகளின் விலைகள் கடந்த செப்டம்பர் முதல் அதிகரித்ததுடன், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் அதியுட்ச விலை அதிகரிப்பை எட்டியுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி இதற்கான பிரதான காரணியாகும்.

இவ்வாறான விலை அதிகரிப்பு காரணமாக குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு உணவு கிடைப்பதில் பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்கள் உணவு நுகர்வினை குறைத்துள்ளதுடன், போசனை குறைந்த உணவினை நாடிவருகின்றனர்.

இது அவர்களது உணவு பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் போசனை ஆகியவற்றில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x