முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கொரோன கொத்தணியில் பலருக்கு தொற்று இனங்காணப்பட்டதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17-05-2021 அன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் கடுமையான பாதிப்புக்கள் இருந்த 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த 21-05-2021 அன்று முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டது இருப்பினும் தொடர்ந்து பயனக்காட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளாந்த கூலித்தொழிலை நம்பிவாழும் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இதேவேளை கடந்த 17-05-2021 முதல் திடீரென எந்த அறிவித்தாலும் இன்றி முடக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பில் 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் முள்ளியவளையில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் முடக்கப்பட்ட நிலையில் காணப்படும் புதுக்குடியிருப்பு பத்தாம் வடடார மக்கள் தாம் கொரோனாவால் இறக்கிறோமோ இல்லையோ உணவின்றி இறக்கப்போகிறோம் என தெரிவித்துள்ளனர்.

தமக்கு இன்றுவரை எந்த உலருணவு பொருட்களும் கிடைக்கவில்லை எனவும் தமது பகுதியில் உள்ள சிலர் தமக்கு பிடித்தவர்களுக்கு மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் மூலம் உதவுவதாகவும் அதனை உரிய முறையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை முன்னிலைப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி முடக்கநிலையிலும் தமது கிராமத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில்,

பிரதேச செயலக அதிகாரிகள் வந்து அவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கவிடாது பார்ப்பதாகவும் உரிய வகையில் உதவித்திட்டங்களை பெற்றுத்தர ஆவண செய்வதாகவும் தெரிவித்த நிலையில் மக்கள் களைந்து சென்றுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal