தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரபல இயக்குனர் பாலா. இவர் இயக்கிய படங்களுமே ரசிகர்களுக்கு கண்ணீர் வர செய்யும் அளவிற்கு தன்னுடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளை வேலை வாங்குவார். இதனாலே அவர் இயக்கும் படங்களில் அனைத்தும் திரையுலகில் பெரிய அளவில் பேசப்படுகிறது.

பாலா இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி, நான் கடவுள், தாரை தப்பட்டை,  போன்ற படங்களில் நடிகர், நடிகைகளின் தோற்றத்தையே முற்றிலுமாக மாற்றி இருப்பார். பாலாவால் பட்ட கஷ்டத்தை வெளிப்படையாக ஒரு நடிகை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜேஜே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. அதன்பிறகு இவர் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, தம்பி, பட்டியல், பொறி, ஜித்தன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.  

பூஜாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான பேசப்பட்ட படம் நான் கடவுள். பாலாவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பார்வை இழந்த பெண்ணாக நடித்திருந்தார். பாலாவின் படங்களில் நடிகர், நடிகைகள் தோற்றத்தாலும், நடிப்பாலும் கஷ்டப்படுவது புதிதல்ல.

நான் கடவுள் படத்தில் பாலாவால் பல கஷ்டத்தை பூஜா அனுபவித்து உள்ளார். இப்படத்தில் பூஜாவின் கருவிழி தெரியாத அளவுக்கு லென்ஸ் வைத்து விடுவார்களாம். இப்படத்தில் ஒரு காட்சியை மட்டுமே பத்து நாட்கள் பாலா எடுத்ததாக பூஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு அவர் எடுக்கும் காட்சி திருப்தி அளித்தால் மட்டுமே அடுத்த காட்சிக்கு செல்வாராம். சூட்டிங் எப்படி எடுக்கிறார்கள் என்று கூட பூஜாவால் பார்க்க முடியாதாம். தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் இவ்வாறு பல கஷ்டங்கள் பட்டுள்ளார் பூஜா.

இப்படத்தில் பிச்சை எடுக்கும் காட்சிகளில் பொதுமக்கள் உண்மையாகவே பிச்சை போட்டு உள்ளார்கள் என்று கூறியுள்ளார். இது பூஜா தான் என்று தெரியாத அளவுக்கு தோற்றத்தையே மாற்றி உள்ளார் பாலா. என்னதான் இருந்தாலும் பூஜாவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத படம் நான் கடவுள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal