நேற்றைய தினம் இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

காரைநகர் – கோவளம் கடற்பரப்பில் குறித்த கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களையும், படகினையும் கடற்படையினர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x