
இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் ஜுன் மாதமளவில் மேலும் தீவிரமடையலாம் என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று கற்கைப் பிரிவு பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க (Hemantha Senanayake) தெரிவித்துள்ளதுடன், இதனால் நாடு தற்போது கொவிட் தொற்றின் தீர்மானம் மிக்க கட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் மரணங்களை பார்க்கும் போது அடுத்த மாதமளவில் அந்த நிலைமை மேலும் மோசமடையும் என்பதனை புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் ,
நாட்டில் இன்னும் கொரோனா தொற்று உச்ச நிலைக்கு வரவில்லை எனவும், ஆனால் அடுத்த மாதமளவில் உச்சமடையும் என்றும் இதனால் அதனை கட்டுப்படுத்த தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.