
2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்மறையான சதவீதத்தில் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, இக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி 1.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2021ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிலையான விலையில் 2,497,489 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.
தற்போது, பொருளாதாரத்தின் மூன்று முக்கிய கூறுகளான விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 8.7%, 29.9% மற்றும் 57.4% என்ற நிலையில் பங்களிக்கின்றன.
2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், ஒட்டுமொத்த வேளாண்-பொருளாதார செயல்பாடு 1.7 வீத மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.