நேற்றிரவு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்துள்ளது.

இதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்தத் தடுப்பூசிகளை பொறுப்பேற்பதற்காக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றிருந்ததுடன் அவரால் பொறுப்பேற்கப்பட்ட தடுபூசிகள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை நாட்டின் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதற்கமைய, ஏழு மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal