,

Gallery

கொட்டதெனியாவ பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இரண்டு சிறுவர் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உறவினர்கள் எனவும், இவர்கள் இருவரும் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த சிறுவர்கள் கொட்டதெனியாவ, வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 859 1634, 033 224 0050, மற்றும் 033 227 2222 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal