இயற்கை மடியிலே அழகு கொட்டிக் கிடக்கிறது
இரு விழிகளும் அடங்காமல் திரைப்படமாகிறது
இம்மியளவும் பிசகாமல் கனவிலே மிதக்கிறது
இரத்தம் சுற்றும் போதே மூளை அதைருசிக்கிறது
வியந்து பார்க்கும் விழிகளில் ஓராயிரம் கனவு
விடுமுறையில் வந்து விளையாடும் அந்தவுறவு
விருந்துண்ணும் சாட்டிலே கிளிகளின் மகிழ்வு
வீதியெங்கும் தோரணங்கள் ஆடும் வண்ணவடிவு
அடுக்கடுக்கு மாளிகைகள் அழகான சித்திரமாய்
அதற்கு அழகூட்டும் வண்ணப்பூக்கள் அதில் வரமாய்
அரையும் ஊர்திகளோ அணிவகுப்பில் அதிசயமாய்
அவற்றை முந்திவரும் பறவைகளும் பெரும் எடுப்பாய்
படிப்படியாக உயரும் பஞ்சவர்ணத் தொட்டில்
பார்வையில் தானே சிரிக்கும் அழகுக்கொட்டில்
பட்டை தீட்டச்சிரிக்கும் படுத்துறங்கும் கட்டில்
பாக்கும் விழிகளகல வியப்பு நெற்றிப்பொட்டில்
அழகின் பிறப்பிடம் இயற்கைத்தாயின் மடி
அவற்றைக்காப்பது எம்மவர்களின் விடாப்பிடி
அமுதின் சுவையாக கண்கள் இரசிக்கும் படி
அருந்தும் உணர்வுதனில் இதயம் துடிக்குதெடி
மதி கெட்டுப் போனாலும் மறக்காத பொக்கிசங்கள்
மனதில் பதிந்த நினைவில் மீளும் வரமாய் சுகங்கள்
சதி வலையில் சிக்கியே சீரழியும் பேரதிசயங்கள்
சாகும் வரைக்கும் மண்ணில் மறக்காமலே உயிர்கள்

சண்முகநாதன் சின்னராஜா

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal