
ஆதிகால மருத்துவமுறைகளிலே சித்தமருத்துவமானது மிகவும் முக்கியமான மருத்துவமுறையாகக் கருதப்படுகிறது. இது அன்றுதொட்டு இன்றுவரை பலருக்கு ஆரோக்கியத்தை அள்ளிவழங்கிக்கொண்டிருக்கிறது. இது திராவிடா்களின் மருத்துவமுறையாக வளா்ச்சி பெற்றிருப்பதால் இன்றும் தமிழா்களுக்கு பெருமைசோ்த்துநிற்கிறது. இந்த சித்தமருத்துவமானது எப்படித்தோற்றம்பெற்றது? இதன் அடிப்படைக் கருத்துக்கள் எங்கிருந்து கிடைக்கப்பெற்றன? இதற்கும் மதம், ஆன்மீகம் என்பவற்றிற்கும் என்ன தொடா்பு இருக்கிறது?
சித்த மருத்துவத்தின் தத்துவங்ள் ஆரம்பத்திலே சிவனினால் சக்தியிடம் கையளிக்கப்பட்டு சக்தி அதனை நந்தியிடம் கொடுத்து நந்தி அதனை சித்தர்களிடம் சேர்ப்பித்தார் என்று பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தத்துவங்கள் ஆரம்பத்திலே18 சித்தர்களினால் கையாளப்பட்டிருக்கினறன. இந்த சித்தர்களிலே முக்கியமானவராக அகத்தியர் இருந்திருக்கிறார். இந்த அகத்தியரின் தலைமையிலேயே சித்த மருத்துவத்து முழுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சித்த மருத்துவத்துறையின் தோற்றம் பற்றிய இந்த கருத்துக்களை நம்புகிறோமோ என்பது முக்கியமல்ல. இது அவசியமும் இல்லை. ஆனால் அக்காலத்திலிருந்தே மதமும் மருத்துவமும் ஒருங்கிணைந்து செயற்பட்டிருக்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விள்குகிறது.
உலகினதும் ஏன் இந்த அண்டசராசரங்கள் அனைத்தினதும் இயக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது energy என்று சொல்லப்படுகின்ற சக்தி என்பது உலகறிந்த உண்மை. சக்தி இன்றி எதுவும் இயங்க முடியாது. அந்த சக்திதான் சிவனின் சரிபாதி என்றும் அவள்தான் அனைத்தயும் இயக்கிக்கொண்டிருக்கிறான் என்றும் இந்து மதம் சொல்கிறது. இந்த உடல் இயக்கமும் சக்தியும் தான் மருத்துவத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது.
சி. சிவன்சுதன் வைத்திய நிபுணர்