மேஷம்
aries-mesham
தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. வயிற்று உபாதைகள் தொல்லை தரலாம். படுத்தவுடன் தூக்கம் வராது.

ரிஷபம்
taurus-rishibum
மனத் தெம்பும், மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் பால் பாசம் பொழிவார்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.

மிதுனம்
gemini-mithunum
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, குடும்ப சுகம் ஆகியவை குறையும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.

கன்னி
virgo-kanni
பெண்காளால் இலாபம், அவர்கள் நட்பால் சுகம் ஏற்படும் இனிய நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. ஆரோக்கியம் மேம்படும். பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் பெறும் நாள்.

மகரம்
capricorn-magaram
புதிய பயிற்சிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தெளிவும் பிறக்கும். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூட, அவருக்கு என்ன பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

கடகம்
cancer-kadagam
இன்று வாகன யோகம், இனிய பயணங்கள் ஆகியவை ஏற்படும். தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். மணவாழ்வில் இன்பம் பெருகும். இனிய கனவுகள் வரும்.

சிம்மம்
leo-simmam
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, மாற்றங்களை எதிர் பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.

துலாம்
libra-thulam
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரித்து, இந்திர போகம் ஏற்படும்.

மீனம்
pisces-meenam
கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. கௌரவக் குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.

தனுசு
sagittarius-thanusu
நியாயமாக நடக்க வேண்டிய நாள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.

விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்களால் உணர்வுபூர்வமான சந்தோஷம் நிலவும்.

கும்பம்
aquarius-kumbam
எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும். எதிரிகள் பணிவர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal