மேஷம்

வெற்றி மேல் வெற்றி, அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர் பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும்.

ரிஷபம்

இன்று, சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும்.

மிதுனம்

ஆரோக்கியம் மேம்பாடு அடையும், தனலாபம், நல்லுணவு, படுக்கை சுகம், புத்தாடைகள், நண்பர்கள் சந்திப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் ஆகியவை ஏற்படும். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கன்னி

மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை அடைவீர்கள்.

மகரம்

இன்று, புதிய சொத்துக்கள் அமையும். நல் ஆரோக்கியம் ஏற்படும். நல்ல நண்பர்களின் நட்பு மற்றும் அதனால் சந்தோஷமும் ஏற்படும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும்.

கடகம்

வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். ஆறுவது சினம் என்றபடி முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்மம்

இன்று, பலவகைகளிலும் பண வருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பு நலம் தரும்.

துலாம்

எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். தெய்வ பக்தி, தெய்வ நம்பிக்கை ஆகியவை ஏற்படும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். சுகம், சந்தோஷம், உல்லாசப் பயணங்கள் ஆகியவை ஏற்படும்.

மீனம்

எல்லாவற்றிலும், எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். குறுகிய தூரப் பயணங்கள் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷமான வாழ்க்கை அமையும். பயந்த நிலையும் ஏற்படும்.

தனுசு

இன்பச் சுற்றுலா, நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதால் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவு வகைகள் ஆகியவையும் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று, பண இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள், நெஞ்சு வலி, வயிறு சம்பந்தமான உபாதைகள் மற்றும் தேவையற்ற அவமானங்கள் ஏற்படும்.

கும்பம்

பயணங்கள் மற்றும் செயல்பாடுகள் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். கட்டுக்கு அடங்காத செலவுகள் ஏற்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x