மேஷம்
aries-mesham
அன்னையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம்.

ரிஷபம்
taurus-rishibum
சகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். முகநூல் மூலம் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.

மிதுனம்
gemini-mithunum
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுமுகமாக இருத்தல் அவசியம். வாகனங்களில் வேகத்தைக் குறைத்து விவேகமாக ஓட்டவும்.

கன்னி
virgo-kanni
தன லாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வீர்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவர். வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும்.

மகரம்
capricorn-magaram
சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும். பலவகைகளில் மனைவி மனமுவந்து உதவுவாள். காதலுக்கு மரியாதை ஏற்படும்.

கடகம்
cancer-kadagam
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் கிடைக்கும், சாத்திரங்களில் தேர்ச்சி ஏற்படும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.

சிம்மம்
leo-simmam
வாயை அடக்கி வம்புக்கு செல்லாதிருப்பது சுகம். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.

துலாம்
libra-thulam
அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும்.

மீனம்
pisces-meenam
பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறும்.

தனுசு
sagittarius-thanusu
நியாயமாக நடக்க வேண்டிய நாள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.

விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் போன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள்.

கும்பம்
aquarius-kumbam
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal