ஜப்பானில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பின்னர் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய மூன்று நபர்களுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஜப்பானில் கிஷிடா-கியோடா பிரதமராக பதவி ஏற்றபின் வழங்கப்படும் முதல் மரண தண்டனை நிறைவேற்றம் இதுவாகும். தூக்கிலிடப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .

அதேவேளை மரணதண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதி அமைச்சர் யோஷிஹிசா புருகாவா, இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார்.

முன்னதாக ஜப்பானில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை 2003-ல் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இன்று மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு

அதன் பின்னர் தற்போது இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சர் யோஷிஹிசா புருகாவா உத்தரவின் பேரில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே யோஷிஹிசா புருகாவா, தனது பதவியை ஏற்கும் போதே, ​​கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்தவருக்கு வழங்கப்படும் மரண தண்டனை தவிர்க்க முடியாது என தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஜப்பானில் மனித உரிமை குழுக்கள் மற்றும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் இருந்தபோதிலும் மரண தண்டனைக்கான பொது ஆதரவு அங்கு அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal