உலக மக்கள் 2021ம் ஆண்டை மறந்துவிடவே முயன்றுவரும் நிலையில், 2022 தொடர்பில் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார் பிரபலமான ஒருவர்.
பிரேசில் நாட்டில் பிறந்த Nicolas Aujula என்பவர் எதிர்காலம் தொடர்பில் தமது கணிப்புகளை வெளியிட்டு வருபவர். தற்போது 2022 தொடர்பிலும் தனது கணிப்பை அவர் பதிவு செய்துள்ளார்.
2021ம் ஆண்டு கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு, 2022ம் ஆண்டும் வருத்தமளிப்பதாகவே அமையும் என Nicolas Aujula சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் போன்று புதிய மிக மோசமான தொற்று ஒன்று பரவும் ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய ராணியாருக்கு 2022ல் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் கணித்துள்ளார்.
மேலும், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி, ராணியாருக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்பார்கள் எனவும், பிரித்தானிய மக்களால் பெரிதும் விரும்பப்படாத இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதியின் புகழ் 2022ல் மேலும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, அரச குடும்பத்தினருடனான உறவில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு பெரிய மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை எனவும், ஆனால் மேகன் மெர்க்கல் புதிய பொறுப்புக்கு வருவார் எனவும், ஹரி- மேகன் குடும்ப வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையும் எனவும் Nicolas Aujula சுட்டிக்காட்டியுள்ளார்.
விண்வெளியை கைப்பற்ற சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் போட்டியில் குதிக்கும் எனவும், சீனா உலகின் சக்திவாய்ந்த, தவிர்க்க முடியாத நாடாக உருமாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா போன்று போலந்தும் வெளியேறும் என தெரிவித்துள்ள அவர், ஜெருசலேமில் அதிசயம் ஒன்று நிகழும் எனவும், அது உலகம் முழுவதும் பேசப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசியலில் பெண் தலைவர் ஒருவர் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தாட்சர் போன்று குறித்த பெண் தலைவர் பிரித்தானிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் எனவும் Nicolas Aujula கணித்துள்ளார்.