
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணையின் துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார். இதன் காரணமாக இந்த தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஒரே சுழற்பந்து வீரர் அவர்தான்.
அதிக அனுபவம் வாய்ந்தவர். தென் ஆப்பிரிக்காவுக்கு பலமுறை சென்று வந்தவர். சீனியர் வீரர் என்ற அடிப்படையில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். மேலும் இந்த பட்டியலில் லோகேஷ் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.