
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன்,
அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து, இன்று காலை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றுள்ளார்.
குஜராத்தில் ஒரு நாள் தங்கியிருக்கும் பிரித்தானிய பிரதமர், அந்த மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய வணிகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இதையடுத்து, நாளைய தினம் புதுடில்லி செல்லவுள்ள பிரித்தானிய பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.