
இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஒரே நாளில் 312பேர் குறித்த தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 62,714 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,71,624 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 1,13,23762 பேர் மீண்டுள்ளனர்.
இதேவேளை குறித்த தொற்றின் காரணமாக நேற்று மாத்திரம் 312 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,61,552 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 4,86,310 பேர், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ எனவும் தெரிவித்துள்ளது.