இதயம் ஒரு கண்ணாடி- கவிதை!!

எழுதியவர் – வளருங்கவி அமுதன்

பூவினும் மெல்லிய
ததும்பல் கொண்டு..
வண்டு நெளிவதாய்
உணர்வில் கலந்து..
புரியா நெருடல்
பூசி மறைக்கும்..
அறியா வதைக்குள்
நாளும் தவித்து..
அகத்தின் அளவில்
மிதமிஞ்சி பளிச்சிடும்..
பக்குவமில்லாப் பதற்றம்
வெறுமையை வித்திடும்.
காலக் கண்ணாடி
கிடத்தும் ஒருமை..
சொல்லிட வார்த்தை
இல்லா துயரம்..
தனித்தத் திடலாய்
நகர்த்தும் நாழிகை..
கூறுபோடும் வாழ்வு
எதைநோக்கிய பயணம்..

SCSDO's eHEALTH

Let's Heal