தேன்மொழி : சந்தை வரைக்கும்போறன், வாறியே கானகி?

கானகி : ஓமக்கா….நில்..நில்….வாறன்.

தேன்மொழி : கொஞ்சம் வேகமா வா, வந்துதான் சமையல் பாக்கவேணும்….

கானகி : எனக்கு அந்த வேலை முடிஞ்சிது

தேன்மொழி : உனக்கென்ன, விடியக்காலமை சமைச்சுப்போட்டு ரீ.வி பாக்கவேண்டியது தானே,

கானகி : போங்கோ அக்கா, எங்கை ரீ.வி பாக்கிறது. வீட்டு வேலை முடியமாட்டன் எண்டுது.

தேன்மொழி : அது சரியடி, அதுதான் நானும் ஒரு ஐடியாவோட வாறன், உந்த இன்ஸ்ரன்ற் பூட் கொஞ்சம் வாங்கப்போறன், அதெண்டா உடன உடன சாப்பாடு செய்துபோடலாம்,

கானகி : அதென்னக்கா, இன்ஸ்ரன்ற் பூட்ஸ்?

தேன்மொழி : அதுதானடி, உடனடி உணவு வகைகள்……நூடுல்ஸ், உடன்தோசைமா, உடன் அப்பமா, அதோட உந்த சத்தான விலைகூடின பால்மா வகையள்….தான்

கானகி : உங்கக்கென்ன பைத்தியமே அக்கா, எங்கட புழுங்கல் அரிசி சோறு, நெத்தலி சொதி, பாரை மீன் குழம்பு, அரிசிமா பிட்டு, உழுத்தங்களி, பொரிஅரிசிமா உறுண்டை….இதுகளைவிட சத்தானது வேற ஏதும் இருக்கே,

தேன்மொழி : அப்பிடியே சொல்லுறாய், அப்ப உந்த விளம்பரத்தில காட்டுறதுகளை வாங்க வேண்டாமே?

கானகி : கண்ணுக்கு அழகா, காட்சிக்கு இனிமையா இருக்கிறதுக்காக அதெல்லாம் சத்தானது எண்டு இல்லை, அந்த நாளில…..உதெல்லாமே சாப்பிட்டவையள் எங்கட தாத்தா பாட்டிமார்.

தேன்மொழி : நீ சொல்லுறதும் சரிதான்…..அந்தக் காலத்தில ஒடியல்மாப்புட்டும் குரக்கன் மா புட்டும் உழுந்துச் சாப்பாடும் தானே சாப்பிட்டவையள், என்ன?

கானகி : ஓமக்கா, அப்ப நோயுமில்லை, நொடியும் இல்லை, இப்பதான் வாயில வராத வருத்தமெல்லாம் வருகுது….

தேன்மொழி : உண்மைதான் கானு, நல்ல காலம் நீ சொன்னதால நான் புரிஞ்சுகொண்டன்…..

கானகி : ஓமக்கா…எங்கட பாரம்பரிய உணவைவிட சத்தானது ஒண்டும் இல்லை, அது புரிஞ்சா வருத்தமும் இல்லை.

தேன்மொழி : சரிசரி….வாவா….நேரம் போகுது….

( இருவரும் விரைந்து நடந்தனர்)

கோபிகை

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal