எழுதியவர் – அருமைத்துரை காயத்திரி

அவனுடைய தலையெழுத்து மட்டும்
எப்படி பார்த்தாயா ?..?
பிறக்கும் போது தாயை கொன்றுவிட்டான்;
வாழும் போது தகப்பனையும் தொலைத்துவிட்டான். .
ஆம் அவனுடைய அப்பா இரண்டாவது மணம்புரிந்துவிட்டார். . .? ❤
இவன் உண்மையில் அதிஸ்ரம்
கெட்டவன்; யார் இவனை வளர்ப்பார்கள்;
கடையில் ரவுடியாகத்தான் வருவான்.
பாருங்கவன். . .
ஊரவரின் வசைப்பாட்டுக்களை அடிக்கடி காதால் சிறுவயதிலிருந்தே கேட்டிருக்கிறான். . ? ❤
யாருடைய சாபமும் அவன் விடயத்தில்
சிறிதும் பலிக்கவேயில்லை;
தன்னை அவன் காதலித்தான்;
தனக்கான அறிவை கல்வியால்
பட்டைத்தீட்டினான்;
காப்பகத்தில் தற்காப்புடன் வளர்ந்தான்.
தன்னடக்கம் தராத கல்வியை குப்பைக்கு சமனாகவே நினைத்தான். . .? ❤
இன்று வளர்ந்துவிட்டான்;
மீசை அரும்பி அவனை பெரிய மனுசன் என்பதை செப்பமிட்டது;
சிகையலங்காரமும்
அவன் சுதந்திரத்தையும் பிறர் பார்வையினையும் சலனப்படுத்தவேயில்லை.? ❤
வளர்ந்த இளந்தாரியாகிவிட்டான்;
நாலு பேருக்கு வேலை கொடுக்கும்
பெரிய முதலாளியாக சிறுவயதிலே வளர்ந்துவிட்டான். . .
ஆடைத்தொழிற்சாலை நிறுவனத்தின்
முகாமையாளர் அவன்தான்.
ஆம் அவனுடைய கல்வியறிவு சமூகத்தின் தேவையில்லாத முகத்திரையினை கிழித்தெறிய பணித்தது. . .? ❤
அவன் கல்நெஞ்சம் படைத்தவனோ. . .
கொஞ்சம் கூட அழவேயில்லை. . .
எவ்வளவு கஸ்ரத்தை பார்த்தும் அவன் சிறிதும் கலங்கவேயில்லை. . .
மிகவும் பிடிவாதமானவன். . .? ❤
இன்று அவன் அழுகிறான். . .
ஆம் அவனுக்கும் அழத்தெரியும்
காதல் மனைவியை இழந்துவிட்டான்.
தன்னை போலவே தன்னுடைய மகளும் அம்மாவை இழந்ததை நினைத்து மீழாத துயரம் அடைகிறான். . .? ❤
அவனுடைய உயர்ந்த இலட்சியங்களை கொண்ட வாழ்வியல் பயணத்தில்
அவனுடைய அன்பியல் மனிதர்களை தொலைத்துகொண்டே வருவதாக உணருகிறான்;
ஆனால் அவனுடைய தந்தையின்
தவறினை தன்னுடைய மகளுக்கு செய்யவேயில்லை. . .
மகளுக்கான அம்மாவாகவும்;
அப்பாவாகவும் எல்லா உறவுமாகவும்; உருவத்தில் உணர்வை
செதுக்கினான். . .? ❤
வீரமான பெண்ணாக மகளை
பட்டைதீட்டிய தகப்பன்;
ஆண்ணின் சக்தியாகவும்
பெண்ணை வளர்த்தார்;
அவளுக்கான தேவைகளுக்கு
வழிவிட்டு நடக்கும் நண்பனாக
உருமாறினான். . .? ❤
இன்றளவும் அவனுடைய மகளுக்காக;
மாத்திரம்

அவனுக்கும் அழத்தெரியும். . .? ❤

அழத்தெரிந்தவனுக்கும்
எழுத்துருவம் கொடுப்பவள். . .? ❤

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal