
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை அமெரிக்காவிற்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். மாநகர காவல் படையை உருவாக்கியமை மற்றும் சீருடை வடிவமைப்புக் குறித்துப் பயங்காரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அலைனா, “எல்லோருடைய அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு நீதித்துறை பாதுகாப்புகளுடன் கூடிய வலுவான சட்ட விதிமுறைகளைக் கொண்டிருப்பது சிறந்த வழியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.