அமெரிக்காவில் வீசிய பனிப்புயல் காரணமாக சாலையில் சென்ற வாகனங்களை அதன் ஓட்டுநர் ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வர்ஜீனியாவில் வீசிய பனிப்புயலைத் தொடர்ந்து ஐ 95 என்ற நெடுஞ்சாலை மூடப்பட்டது.
இதனால் அந்தச் சாலையின் இருமருங்கிலும் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தி விட்டுச் சென்றுவிட, எஞ்சியவர்களோ மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு காத்திருப்பவர்களுக்கு உணவும், குடிநீரும் வழங்க மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.