எழுதியவர் – தமிழ்செல்வன்

பறக்கும் தட்டு மெதுவாக தரை இறங்கியது, சென்னைப் புறநகரில் ஆள் நடமாட்டமில்லாத இடம் , 4 கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து அந்த காட்சியை கவனித்துக்கொண்டிருந்தன
அவர்கள் சிவா மற்றும் சதீஸ் .இருவரும் இணைபிரியாத நண்பர்கள் . ஒரே இடத்தில் உத்யோகம் .இரவுப்பணி முடிந்து காலை 5 மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
” டேய் , UFO டா ‘
” அப்படீன்னா ”
”பறக்கும் தட்டுடா ”
” ஓடிறலாம்டா , பயமா இருக்கு ”
” நான் இருக்கேன்ல , பயப்படாத அவங்க கூட friend ஆயிடலாம் , யூசுப்ஃபுல்லா இருக்கும் ”
” அப்படியா சொல்ற ”
” ஆமாண்டா பாத்துட்டே இரு ,இப்போ அதுல இருந்து ஒரு கதவு திறக்கும் . ஏலியன்ஸ் வருவாங்க , உருண்டை மண்டை , ஆண்டெனா மாதிரி 2 கொம்பு ,ஒவ்வொரு கைலயும் 3 விரல் . டேபிள் ஃபேன் பக்கத்துல நின்னு பேசின மாதிரி கர் கர் ஒரு குரல் இருக்கும் ”
” என்னடா , ஏற்கனவே அவங்க கூட பழகின மாதிரி சொல்ற ”
” ஸ்டார் மூவிஸ் ல எத்தனை படம் பாத்திருக்கேன் , இது கூட தெரியாதா , பாத்துட்டே இருடா ”
” டேய் , கதவு தொறக்குது . கதவு தொறக்குது ”
” ம்ம் சொன்னேன்ல ”
” யாரோ வராங்கடா , மரத்து பின்னால ஒளிஞ்சிக்கலாமா ”
” சரி வா , ஒளிஞ்சிக்கலாம் ”
” போன்ல போட்டோ எடுத்துக்கலாமா ?”
” எடு , என் போன் சார்ஜ் இல்ல , ஆஃப் ஆயிடுச்சு ”
” சேம் பின்ச் , என்னோட போனும் ஆஃப்”
” நிழல் மாதிரி எதோ தெரியுதுடா ”
” வெளிய வராங்க , வராங்க , மனச திடப்படுத்திக்க சத்தம் போட்டுடாத ”
” ம்ம் சரிடா ”
” என்னடா , இவன் மனுஷன் மாதிரி இருக்கான் , pant ஷர்ட் எல்லாம் போட்டிருக்கான் ”
” அழகா இருக்கான்ல ”
” அப்போ இவன் , ஏலியன் இல்லையா ”
” ஒரு வேல ஏதாவது , சினிமா ஷூட்டிங்கா இருக்குமோ ”
” பறக்கும் தட்டு , அதே மாதிரி லேண்ட் ஆச்சேடா ”
” அவன் நம்மல தான் பாக்றான் ”
” எதுக்குடா பயம் , அவனும் நம்மல மாதிரி மனுஷன் தானே ”
” கள்ளக்கடத்தல் குரூப்பா இருக்குமோ ”
” வணக்கம் சதீஸ் , வணக்கம் சிவா . இங்க வாங்க ”
” நம்ம பேரு அவனுக்கு எப்படி தெரியும் , ஐடி கார்ட் பாத்திருப்பானோ ”
” அந்த கருமத்தை தான் அப்பவே கழட்டி பேக் உள்ள வச்சுட்டேனேடா ”
”வரான் வரான்”
” வணக்கம் சார் எங்க பேர் உங்களுக்கு எப்படி தெரியும் ”
” நாங்க உங்கள ரொம்ப நாளா கண்காணிக்கறோம் , உங்க உதவி எங்களுக்கு தேவைப்படுது . எங்களோட mission க்கு ஒத்துழைப்பு கொடுத்தா ,உங்களுக்கு தேவைபடற உதவிய செஞ்சு கொடுப்போம் ”
” இந்த நாங்க நாங்க னு சொல்றீங்களே , அது யாருங்க ”
” சொல்றேன் சிவா , நான் இப்போ அன்ட்ரமீடா கேலக்சில இருக்கற ஒரு கிரகத்துல இருந்து வரேன். இந்த பூமில இருக்கற செய்திகளை அங்க தெரியப்படுத்தற வேலை எனக்கு”
” ஆண்ட்ரியா கேலக்சில இருந்து எத்தனை பேர் வந்திருக்கீங்க , உள்ள வேற யாராவது வந்து இருக்காங்களா ?”
” ஆண்ட்ரியா இல்ல சதீஸ் , அன்ட்ரமீடா , இந்த முறை நான் தனியாத்தான் வந்திருக்கேன் . பூமில தங்கத்திற்கு மதிப்பு அதிகம்னு தெரியும் , உங்களுக்கு எத்தனை கிலோ வேணுமோ தரேன் , உங்களுக்கு சம்மதம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க மத்ததை நாங்க பாத்துக்கறோம். உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது.நான் கியாரண்டி ”
” நீங்க ஏலியன்ஸ்னா நம்ப முடிலயே, எங்களை மாதிரியே இருக்கீங்க”
”டீவீல கேண்டிட் கேமரா ஷோ வா , கடைசியில எங்க தலைல தொப்பி மாட்டி அங்க பாருங்க கேமரானு சொல்லபோறீங்க , கரெக்ட்டா ?”
” நான் சொல்றத கவனமா , பொறுமையா கேளுங்க. 30 ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி எங்க கிரகத்துல இருங்கறவங்க பூமி இருக்கறத கண்டுபிடிச்சாங்க. இங்க இருக்கற சூழ்நிலைக்கு பழகிக்க 100 பேரை தேர்ந்தெடுத்து இங்க அனுப்பினாங்க , அது மாதிரி நாலு இனத்தை சேர்ந்தவங்க , இங்க 4 முறை குடியேறினாங்க , சீனா . கிரேக்கம் , ஆப்பிரிக்கா .தமிழ் நாடு னு நாலு முறையும் வேற வேற இடத்துல குடியேறினாங்க .”
” அட ஆச்சரியமா இருக்குல்ல ”
” அவங்க இங்க வந்தப்போ இங்க மனிதர்களே இல்லை , அப்புறம் தான் இங்க மனித இனம் குடியேறுச்சு நாம எல்லாரும் ஒரே வம்சாவளிய சேர்ந்தவங்க ”
” அப்போ மனுசங்க எல்லாருமே பூமியோட வந்தேறிங்க தானா, நம்ம பூர்வீகம் ஆண்ட்ரியாவா ?”
” ஆமாம் , சிவா , நாங்க இங்க நடக்கிறதை கண்காணிச்சுட்டே இருக்கோம் , சமயம் வரும்போது உங்க கிட்ட எல்லா உண்மைகளையும் அறிவிப்போம் , அது வரைக்கும் இதை ரகசியமா வச்சுக்கோங்க ?”
” இந்த விஷயம் யாருக்கெல்லாம் தெரியும் சார் ”
” உங்களை மாதிரியே பூமில இருக்கற பல பேர் எங்க கூட தொடர்புல இருக்காங்க , அமெரிக்கால NASA ஓட உயரதிகாரிகள் ,அமெரிக்க , ரஷிய ஜனாதிபதியா இருந்தவங்க எல்லாருக்கும் இந்த உண்மை தெரியும். அப்புறம் நீங்க தெய்வ சக்திவாய்ந்தவங்கனு சில மனிதர்களை நம்பறீங்க இல்லையா . அவங்க சில பேர் எங்க கிட்ட பயிற்சி எடுத்து பூமில இருக்கற மனிதர்களுக்கு நல்லது பண்ணவங்க தான் ”
” இதை எல்லாம் எப்படி நம்பறது ”
” hidden secrets about aliens னு google பண்ணிப் பாருங்க உங்களுக்கே புரியும் , பூமில இன்னும் நிறைய மர்மம் இருக்கு , எல்லாத்தையும் வெளிய சொல்ல முடியாதுனு அமெரிக்க , ரஷ்ய அரசாங்கங்கள் வெளிப்படையா அறிவிச்சு இருக்காங்க , என்ன நம்புங்க நாங்க உங்களுக்கு கெடுதல் பண்ண மாட்டோம் ”
” சார் , எங்களுக்கு சம்மதம் சார் , தங்கம் எல்லாம் வேண்டாம். நீங்களா இஷ்டப்பட்டு கொடுத்தா வேண்டாம்னு சொல்லாம வாங்கிக்கறோம் , என்ன உதவினாலும் எங்க கிட்ட கேளுங்க ”
” இந்த மாத்திரை மாதிரி இருக்குல்ல , இது ஒரு chip இதை முழுங்கிட்டா நீங்க எங்க கூட தொடர்புல இருப்பீங்க ”
” தண்ணி இருக்கா ?”
” முழுங்கிட்டேன் ”
” நானும் முழுங்கிட்டேன் ”
” சரி சிவா , சதீஸ் ,நான் கிளம்பறேன் , மறுபடியும் உங்க கூட chip மூலமா தொடர்பு கொள்றேன் ”
” ஆளுக்கு ஒரு சிம் போட்டு , எங்களையே போனா மாத்திட்டு போறீங்களே ”
” நான் போய்ட்டு வரேன் ”
” இது தான் ரிமோட் கண்ட்ரோலா , இங்க இருந்தே வண்டிய ஸ்டார்ட் பன்றாரு பாரேன் ”
” கிரைண்டர் ஓடற மாதிரி சத்தம் வருது ”
” உங்க பேர் என்ன சொல்லவே இல்லியே ”
” என்னோட பேர் …. ”
” சார் , உங்க கிரைண்டர் சத்தத்துல சரியா கேக்கல , என்ன பேர் சொன்னீங்க ”
”’ என்னோட பேர் தமிழ்ச்செல்வன் ”
கதவு மூடிக்கொண்டது ,பறக்கும் தட்டும் வானில் ஏறியது. ஜன்னல் வழியாக பூமி புள்ளியாக மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதன்பின் இயந்திரத்திரையில் சிவா , சதீஸ் இருவரின் நடவடிக்கைகளை கவனிக்க தொடங்கினேன்.
{ முற்றும் ]

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal