இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ளதாக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தில் ஜி. எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகிய அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது , வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி. எல். அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது எனவும், அநேகமாக அவர் எதிர்காலத்தில் சபாநாயகராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த அதிரடிக்கு தயாகும் கோட்டாபய; முக்கிய பலரின்  பதவிகள் பறிபோக வாய்ப்பு!

ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ள சரத் வீரசேகரவிற்கு பதிலாக தற்போது பொலிஸ் இராஜாங்க அமைச்சராக இருக்கும் திலும் அமுனுகம ​பொலிஸ் அமைச்சராக நியமிக்கப்படலாம எனவும் கூறப்படுகிறது.

அதேவேளை இராஜாங்க அமைச்சர் டி. வி.சானக்கவும் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் மஹிந்தானந்த அளுத்கமகே தனது அமைச்சுப் பதவியை இழப்பதுடன், அந்த அமைச்சும் பிரசன்ன ரணதுங்கவின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x