2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என உலக புகழ்பெற்ற ஜோதிடர் Nostradamus கணித்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் Nostradamus, உலகபுகழ்பெற்ற ஜோதிடரான இவர் 1503 – 1566 வரை வாழ்ந்தார். உலகில் பின்னாளில் நடக்க போகும் முக்கிய விடயங்களை அவர் கணித்து வைத்திருக்கிறார்.
உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன.
அந்த வகையில் Nostradamus 2022 தொடர்பில் கணித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. Nostradamusன் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு அதாவது 2022ம் வருடம், உலகில் மிகவும் ஆபத்தான அணுகுண்டு வெடிக்கும். அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் உலகின் தட்பவெப்ப நிலை மாறி பிரம்மாண்டமான பனிப்பாறைகள் முற்றிலும் உருகும்.

இதனால் உலகிலுள்ள கடல்களின் நீர்மட்டம் அதிகரிக்கும். இதனால் பல தீவுகளும் சிறிய நாடுகளும் நீரில் மூழ்கும். கோடிக்கணக்கான மக்கள் கதிர்வீச்சினால் அகால மரணமடைவார்கள், எஞ்சியிருப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும்.
2022 ஆம் ஆண்டில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட கணினிகள் மற்றும் ரோபோக்களே மனிதகுலத்திற்கு எதிரியாக மாறி மனித இனத்தையும் பூமியில் இருந்து அழித்துவிடும். அடுத்த ஆண்டு பிரான்ஸுக்கு கடுமையான வருடமாக இருக்கும், 2022 ஆம் ஆண்டில் ஏற்படும் பெரிய புயலினால், விவசாயத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.
மேலும் பிட்காயின் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை பெரிய சொத்துகளாக கருதப்படும். அமெரிக்க டொலர்களில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். உலகில் பணவீக்கம் மிகவும் அதிகரிக்கும், இதன் காரணமாக மில்லியன் கணக்கான ஏழைகள் பட்டினியால் தங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது.