2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைில் நடைபெற்ற கறாத்தே போட்டி நிகழ்வில் 2ம் மற்றும் 3ம் இடத்தினை இரு மாணவிகள் பெற்றுள்ளனர்.

வாழைச்சேனை என்னும் இடத்தில் விபுலாந்தர் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகளே இவ்வாறு சாதித்துள்ளனர்.

மேலும் குறித்த குடும்பத்தில் மொத்தமாக மூன்று பெண் பிள்ளைகளும் தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

தாயாரின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் இவர்கள் தங்களது அதித முயற்சியின் பயனாகவே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளி்ன் தாயார் அன்றாடம் கூலித்தொழில் {மட்டி வியாபாரம்} செய்தே இந்த மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றார்.

போட்டியில் வெற்றியீட்டிய இவர்களை சான்ரிதல்கள் பெறுவதற்காக தலைநகருக்கு அழைக்க பட்டார்கள் எனினும் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக கொழும்பிற்கு செல்வதற்கு பணவசதி இன்மையால் இவர்களின் வெற்றி கேடயம் மற்றும் சான்றிதல்கள் என்பவைகள் தலைநகரிலே காணப்பட்டது.

இதனை அறிந்த சகோதர இனத்தவர் தனது பணத்தில் இந்த சான்றிதல்களையும் கேடயங்களையும் கொழும்புக்கு சென்று பெற்றுக்கொடுத்துள்ளார். இவர்கள் வசிக்கும் வீதியில் தான் அரசியல் வாதிகள், மற்றும் கல்விமான்கள், உறுப்பினர்கள், பணம் படைத்த தொழில் அதிபர்கள், கல்லூரி பழைய மாணவர்கள், சழூக ஆர்வலர்கள் என பலர் காணப்படுகின்றனர்.

இருப்பினும் இவர்களின் நீண்ட நாட்களின் ஆசை நாடுகளுக்கு இடயைில் நடைபெறும் போட்டியில் இனைந்து எம் மண்ணிறகும் எமது மொழிற்கும் பெருமை சேர்ப்பதே ஆகும் எனினும் இதற்கான வசதி வாய்ப்புக்கள் எம்மிடம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal